Vijay Sethupathi : விஜய் சேதுபதி , அரவிந்த் ஸ்வாமி இணைந்து நடித்துள்ள காந்தி டாக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

விஜய் சேதுபதி , அரவிந்த் ஸ்வாமி , அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள காந்தி டாக்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது

Continues below advertisement

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. தமிழில் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு மொழிகளிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அடுத்தபடியாக விஜய் சேதுபதி மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து அவர் நடித்துள்ள மற்றொரு படம் காந்தி டாக்ஸ்.

Continues below advertisement

காந்தி டாக்ஸ்

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காந்தி டாக்ஸ் , விஜய் சேதுபதி , அரவிந்த் ஸ்வாமி , அதிதி ராவ் ஹைதாரி , சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். காந்தி டாக்ஸ் படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இது முழுக்க முழுக்க வசனங்களே இல்லாத மெளனப் படமாக உருவாகி இருக்கிறது. கமலின் பேசும் படத்திற்கு பின் கிட்டதட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் மெளன படம் இது. என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் அதிதி மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது இப்படத்தில் இருவரும் ஜோடிகளாக நடித்துள்ளார்கள். மேலும் அரவிந்த் ஸ்வாமியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த மெய்யழகன் படத்திற்காக பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் இப்படத்திற்கும் பெரியளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 


மேலும் படிக்க : Ritika Singh: இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ரித்திகா சிங்

Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ஜனனி உங்களுக்கு ஒரு ஷாக் கொடுத்திருக்காங்க..

Continues below advertisement
Sponsored Links by Taboola