தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு முதல் நாள் திருவீதி உலாவில் சுவாமி கருட வாகனத்தில் காட்சி அளித்தார்.


 


 




தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருத்தேர் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்க இருப்பதை முன்னிட்டு இன்று முதல் நாள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.


 




 


இந்நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி உற்சவர் கருட வாகனத்தில் பச்சை பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேளதாளங்கள் முழங்க ஆலயம் அருகில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று ஆலய வலம் வந்த பிறகு மீண்டும் சுவாமி ஆலயம் குடி புகுந்தார்.


 


 




 


கரூர் தான்தோன்றி மலை தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நடைபெற்ற முதல் நாள் சுவாமி திருவிதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தேங்காய், பழம் பிரசாதத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


 


 




நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளதாகவும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.