தி கோட் (The GOAT - The Greatest Of All Time) படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.


தி கோட் இரண்டாவது பாடல்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்ப்டம் வரும் செப்.5 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தில் விஜய்யுடன்  பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி, அஜ்மல், வைபவ், மீனாட்சி சௌத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். சென்ற ஆண்டு தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டி-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய்க்காக இப்படத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். 


யுவன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் விஜய் இப்பாடலைப் பாடியிருந்த நிலையில், இப்பாடல் விஜய் ரசிகர்களால் ஒருபுறம் கொண்டாடப்பட்டது. 


இணைந்த விஜய், பவதாரிணி குரல்கள்


இதனிடையே நாளை விஜய் தன் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, இப்படத்தின் “சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ” எனும் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இன்று காலை விஜய் - சினேகா இடம்பெற்றிருக்கும் இப்பாடலின் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இப்பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.


 






யுவன் இசையில் விஜய்யின் குரலுடன் சர்ப்ரைஸாக மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் குரல் இப்பாடலில் ஒலித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இளையராஜா இசையமைத்து 1997ஆம் ஆண்டு வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ பேபி’ பாடலை விஜய்யுடன் இணைந்து பவதாரிணி பாரியிருந்தார்.


இந்நிலையில், பவதாரணியின் மறைவுக்குப் பிறகு, அவரது இறுதிப்பாடலை தன் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணைந்து அவர் பாடியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Sivakarthikeyan Seeman Meeting: தம்பி சிவாவுடன் கூட்டணி சேர்கிறாரா சீமான்? வெளியான புகைப்படத்தால் கசிந்த தகவல்!


Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்