தருமபுரி மாவட்டம் அரூர் நகரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் காமாட்சி அம்மன் கோவில் ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானது. இந்த  ஶ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஶ்ரீ காளியம்மன், ஶ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு காமாட்சியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 11 நாள் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. 


இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள், நடத்திய அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் பிரபலமானவர்களை கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இன்னிசை கச்சேரிகள் நடத்தப்பட்டு வந்தது. 


இதனை தொடர்ந்து பெண்கள் மாவில் மாவிளக்கு எடுத்துக் கொண்டு, சாமி ஊர்வலம் அரூர் நகர் முழுவதும் மேளதாளம் வான வேடிக்கையிடம் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்பொழுது பொழுது பெண்கள் மாவிளக்கு எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். 


மேலும் விழாவின் இறுதி நாளான நேற்று, சந்தை வீட்டில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் சாமி எடுத்து சக்தி அழைத்து, ஆடு, கோழி உள்ளிட்ட முப்பூசை கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீ மிதி திருவிழாவின் போது பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கையில் 108 பந்தங்கள் ஏந்தி, தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். அப்பொழுது சாமி எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 


இதனைத் தொடர்ந்து பெண்களின் தீ பந்தங்களுடன், அரூர் நகர் முழுவதும் பிரமாண்டமாக வான வேடிக்கையுடன், மேலதாளங்களுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. 


இந்த திருவிழா வானவேடிக்கை முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றதால், அரூர் நகர பகுதியில் போக்குவரத்து மிகுந்த கடைவீதி தெருவில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தேர்திருவிழாவில் அசம்பாவிதங்கள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.