Leo OTT Release Date: லியோ எந்த ஓடிடி தளத்தில் ரிலீசாகுது? எப்போது தெரியுமா?

வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் லியோ ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

Leo OTT Release Date: விஜய் நடிப்பில் திரைக்கு வந்துள்ள லியோ படம் ஓடிடி தளத்தில் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

லியோ ரிலீஸ்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று முதல் உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆக்‌ஷன் ஜானரில் எடுக்கப்பட்டு இருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், படத்தின் ரிலீஸின் முதல் காட்சி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரிலோ படத்தின் முதல் காட்சியை ரோகிணி திரையரங்கில் த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சென்று பார்த்துள்ளனர். 

கடுமையான கட்டுப்பாடுகளும், விதிகளும் போடப்பட்டிருந்தாலும் லியோ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதிகாலை காட்சிக்கு படக்குழு முறையிட்டிருந்தாலும், இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு ஒருமணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் 9 மணிக்கு லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. 

நெட்ப்ளிக்சில் ரிலீஸ் எப்போது?

அண்மை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ படம் திரையிடப்பட்டது. இந்தியா மட்டும் இல்லாமல், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ரிலீசான லியோ படம் கோலாகல கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறது. இன்று தான் லியோ படம் ரிலீசான நிலையில் அதன் ஓடிடி தள உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

லியோ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் லியோ ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று தொலைக்காட்சிக்கான சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. முன்னதாக லியோ படத்தில் அதிகளவில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் சென்று படத்தை பார்க்க வேண்டாம் என லியோ படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர் உரிமம் பெற்றிருந்த அஹிம்சா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்துள்ள லியோ படம் வசூலில் சாதனை படைக்கும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: LEO Review: லோகேஷ் யுனிவர்ஸில் வில்லாதி வில்லனான விஜய்.. எப்படி இருக்கு லியோ படம்.. முழு விமர்சனம் இங்கே!

Leo Ticket: லியோ டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய ரசிகர் - காரணம் இதுதானாம்!

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola