Leo Ticket: லியோ டிக்கெட்டை கோவில்பட்டியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரூ.1.10 லட்சம் விலை கொடுத்து வாங்கி இருப்பது கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 


விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்த்தப்படி இன்று திரைக்கு வந்துள்ளது. லியோ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, ரிலீஸ் வரை லியோ படத்தின் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.


இந்த நிலையில் கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் லியோ படத்தின் டிக்கெட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வங்கியுள்ளார். விஜய் ரசிகர் மன்றத்திடம் இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கப்பட்டதாகவும், அந்த தொகை விஜய் கொண்டு வந்துள்ள இலவச கல்வி பயிலகத்திற்கு சென்று உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


ஏற்கெனவே லியோ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ரூ. 200 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அதில் ஓடிடி தளத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.120 கோடிக்கும், தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமத்தை ரூ.80 கோடிக்கும் சன் டிவி பெற்றதாக கூறப்படுகிறது. ரிலீஸ்க்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ படம் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்று வசூலை வாரி குவித்து வருகிறது. 






உலகெங்கும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன் என பலர் நடித்துள்ளது. செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த படம் 'லியோ'. படம் ரிலீசாவதற்குள் ஏகப்பட்ட விதிமுறைகளுக்கு பிறகு கோலாகலமாக உலகெங்கிலுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதுவும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறது. 


மேலும் படிக்க: LEO Release LIVE : லியோ படம் சுமாரா? சூப்பர் டூப்பரா? மக்களின் கருத்து என்ன?


Leo HD print Leaked : அதுக்குள்ள 'லியோ' ஹெச்டி பிரிண்ட் லீக் ஆயிடுச்சா? சில நிமிடங்களில் இணையத்தில் வெளியான லைவ் வீடியோ...