Vijay Fans Meeting : ஆலோசனை கூட்டத்தில் ரசிகர்களிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா..?
இன்று இயக்கத்தின் சார்பாக நடந்த சந்திப்பில் பங்குபெற்ற விஜய், அவரது ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் விஜய் வந்த பிறகு, அவருடன் போட்டோ எடுத்த ரசிகர்களிடம், நலம் விசாரித்த விஜய் வீட்டை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இயக்கத்தில் உபயோகமான செயல்களை செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
நடிகர் விஜயை சந்தித்த ரசிகர்கள் கூறியதாவது :
Just In




தளபதியை பார்த்தது எங்களுக்கு ஒரு வர பிரசாதம்தான். எங்களுக்கு அவர் அட்வைஸ் செய்தார். முதலில் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பின் இயக்கத்தை படி படியாக வளர்க்க வேண்டும் என்று சொன்னார். எல்லோரையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
நாங்கள் செய்து வரும் னால திட்டங்களை மேன்மேலும் செய்து வர சொன்னார்கள். பால் அபிஷேகம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், பால் மற்றும் முட்டை போன்ற உணவு பொருட்களை ஞாயிற்றுகிழமை தோறும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.இது போக ரத்தம் தேவை படுபவர்களுக்கு, ரசிகர்களாகிய எங்களை ரத்ததானம் கொடுத்து உதவ சொன்னதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு நாமக்கல் சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இதர அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்துள்ளனர். இந்த மூன்று மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கான ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அனுமதி அட்டை கொடுக்கப்பட்டு, அனுமதி அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 500 நபர்கள் விஜய்யை சந்திக்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : தாக்கப்பட்டாரா அசிம்..? இன்றைய பிக்பாஸ் எபிசோடு தடாலடியாக இருக்கபோது..! ரசிகர்கள் ஆர்வம்..