இந்த வாரத்திற்கான டாஸ்க்காக “ராஜவம்சமும் அருங்காட்சியகமும்” என்ற விளையாடப்பட்டது. இந்த வாரத்தில் நடந்த அனைத்து சண்டை சச்சரவுகளுக்கும் வழக்கம் போல் கமல் பஞ்சாயத்து செய்வுள்ளார். அந்தவகையில் இன்று வெளியான ப்ரோமோக்களின் தொகுப்பை பார்க்கலாம்.






முதல் ப்ரோமோவில், அசீமை கண்டிக்கும் வகையில் கமல் பேசியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. அமைதியாக இருந்தால் காணாமல் போகி விடுவோமா என்ற பயத்தில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அசீம், இந்த வாரத்தில் சண்டை போட்டுள்ளார். 


திட்டிய கமல்: 


ஏடிகே மற்றும் அசிமை எழுப்பி, "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்க நினைச்ச மாதிரியெல்லாம் இங்க நடக்கும் என்று நினைக்காதீங்க" என்று கமல் திட்டினார்.






இரண்டாவது ப்ரோமோவில்,யாரு வில்லாளி, யாரு அம்பு என்று கமல் கேட்ட கேள்விக்கு, பெரும்பாலோனோர் அமுதவாணனை அம்பு என்றும், ஜனனியை வில் என்றும் கூறினார். ஜனனி, விக்ரமனையும் ஏடிகே வையும் வில் அம்பு என்று சொன்னார். அதற்கு "நிறைய அம்பு வாங்கிய உங்களுக்கு தெரியும் எது அம்பு எது வில்" என்று கமல் கூறினார்.






மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்தில் யார் வெளியேற்ற படுவார் என்ற கேள்வியை கமல் முன்வைக்க, அனைவரும் அசிமின் பெயரை கூறினார். அப்போது கமல் ஏவிக்ஷன் கார்டை காட்டும்போது கடைசி ப்ரோமோ நிறைவடைகிறது.


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.


போட்டியாளர்கள்:


இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.