உருவக்கேலி மற்றும் கர்ப்பகாலத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்கு செல்வது என்று பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பற்றி வித்யா பாலன் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவருடைய சமையல் திறன் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் பாலின பாகுபாடு குறித்த தனது கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் 'அடக் கடவுளே உங்களுக்கு சமைக்க தெரியாதா?' என்று மக்கள் சிலர் என்னிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர்களிடம், இல்லை எனக்கும் சித்தார்த்துக்கும் சமைக்க தெரியாது என்று கூறினேன்' என்று சொல்லியிருக்கிறார் அவர்.


”கட்டாயம் உங்களுக்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவோரிடம், எனக்கும் சித்தார்த்துக்கும் என்ன வித்தியாசம் நான் ஏன் சமைக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவேன். மேலும் அடிக்கடி என்னிடம் சமையல் கற்றுக்கொள் என்று கூறிய தாயிடம். சமைக்க ஆள்வைத்துக்கொள்வேன் அல்லது நன்றாக சமைக்க தெரிந்த ஒருவரை மணந்துகொள்வேன்” என்று கூறியதாக வித்யா பாலன் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான செயல்கள் பலவற்றுக்கு எதிராக குரல்கொடுத்துள்ள வித்யா பாலன் தற்போது பாலின பாகுபாடு குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.     




Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!


42 வயது நிரம்பிய வித்யா பாலன் பாலக்காட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த வித்யா பாலன் மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் 2003 ஆண்டு வெளியான பாலோ தேகோ என்ற பெங்காலி திரைப்படத்தி மூலம் அறிமுகமானார். லீனா கங்கோபாத்யாய் என்ற எழுத்தாளரின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பாலிவுட்டில் தனது பயணத்தை பரினீதா என்ற படத்தில் மூலம் தொடங்கினர். அந்த படத்தில் நடித்ததற்காக filmfare வழங்கும் சிறந்த அறிமுகம் நடிகைக்கான விருதினையும் பெற்றார்.   




2011-ஆம் ஆண்டு வெளியன் Dirty Pictures என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது. பா, நோ ஒன் கில்டு ஜெசிகா போன்ற பல சிறந்த படங்களில் நடித்துள்ளார் வித்யா பாலன். இறுதியாக 2020-ஆம் ஆண்டு வெளியான சகுந்தலா தேவி திரைப்படத்தில் தோன்றினார். இந்தியாவின் மிகப்பெரிய கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு அந்த படம் எடுக்கப்பட்டது. தற்போது அமேசான் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள ஷெரினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் தலத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.