பிரபல நடிகர் மாதவன், இயக்குநர் லிங்குசாமியின் ராம் போதினேனி 19 படத்தில் நடிப்பது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் மாதவன் நடிப்பில் வெளியான ரன். அன்றைய தேதியில் காமெடி, ஆக்சன் மற்றும் காதல் என்று பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது இந்த படம். மேலும் சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனுக்கு ஒரு நல்ல ஆக்சன் பிளாக் திரைப்படமாகவும் ரன் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் நடிகர் மாதவன் லிங்குசாமி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. 






நடிகர் மாதவன் சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் போதினேனியின் 19 படத்தை லிங்குசாமி இயக்கி வரும் நிலையில், அந்த திரைப்படத்தில் மாதவன் அல்லது பிரபல நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தகவலை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் விளக்கமளித்துள்ளார்.  


அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'லிங்குசாமியுடன் பணிபுரிய நான் ஆவலாக உள்ளேன். மீண்டும் அந்த மேஜிக் நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கிக்கிறேன். ஆனால் அவருடைய தெலுங்கு படம் ஒன்றில் நான் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளேன் என்று வரும் தகவலில் உண்மை இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் மாதவன் தற்போது ஹிந்தியில் பிஸியாக இருந்தாலும் தமிழில் அவருக்கு ரசிகர் கூட்டம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் திலீப் குமார் இயக்கத்தில் மாறா என்ற படத்தில் நடித்திருந்தார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.    


தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?


கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிறந்த லிங்குசாமி பிரபல இயக்குநர்கள் செல்வா மற்றும் விக்ரமன் ஆகிறோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். 2001ம் ஆண்டு வெளியான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாதவனின் ரன், தல அஜித்தின் ஜி, விக்ரமின் பீமா, என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். தற்போது தெலுங்கு உலகில் கால்பதித்துள்ள லிங்குசாமி, பிரபல நடிகர் ராம் போதினேனியை இயக்கி வருகின்றார்.