அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி திரைப்படம் வரும் நாளை பிப்ரவரி (6-ஆம்) அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
விடாமுயற்சி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் விடமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படங்கள் ரிலீஸ்சுக்கு தயாராகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி அஜித்தை இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: ஃபயர் மோடில் சுந்தர் சி...கலகலப்பு 3 பற்றி வெளியான செம அப்டேட்
சிறப்பு காட்சிக்கு அனுமதி:
படத்தின் முன்பதிவு தொடங்கினாலும் படத்தின் சிறப்பு காட்சியின் அனுமதிக்காக பெரும்பாலான திரையரங்குகள் முன்பதிவை தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சியை திரையிட்டுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வழங்கியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, விடமுயற்சி திரைப்படத்திற்குதிரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏறும் ஏற்படாமலும் திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு
பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும் சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், லைகா புரொடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட் கோரிய விடாமுயற்சி திரைப்படத்திற்கு 06.02.2020 மற்றும் 07.02.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை மணிக்கு ஒரு சிறப்புக்காட்சி திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகள், 1957 ன்படி உறிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா விடாமுயற்சி...இதோ டேட்டா
கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிருவாக ஆணையரி குறிப்புரையின் அடிப்படையில், லைகா புரொடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் கோரிக்கையிை அரசு கவனமுடன் பரிசீலித்து விடாமுயற்சி என்ற திரைப்படத்திற்கு 00.02.2025 அன்று வெளியாகும் நான் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 200 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும்! திரையரங்குகளில் திரையிட 1055ம் ஆண்டு, தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம். 11ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி 1957ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் உள்ள சி' படிவ நிபந்தனை 14 மற்றும் H.A.வினை தளர்த்தி, இதுகுறித்து முன்கூட்டியே உரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அனுமதிக்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.