சுந்தர் சி

கவலைகளை எல்லாம் மறந்து கலகலப்பாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் சுந்தர் சி படங்களை செலக்ட் செய்யலாம். லைட் வெயிட்டான ஒரு கதை நிறைய காமெடி ரொம்ப யோசிக்க வைக்காமல் இயல்பாக செல்லும் கதை என பொழுதுபோக்கு அம்சங்கள் சுந்தர் சி படங்களின் பெரிய பலமாக இருக்கின்றன. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகள் முன் வந்த படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. முறை மாமன் தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்த சுந்தர் சி  சமீபத்தில் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அரண்மனை 4 , இந்த ஆண்டு மதகஜராஜா என அடுத்தடுத்த படங்கள் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெற்றுள்ளன. பெரிய ஸ்டார்கள் நடித்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுதுது வரும் நிலையில் சுந்தர் சி படங்களைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்கிறார்கள். 

கலகலப்பு 3

மதகஜராஜா படத்தின் வெற்றியை கொண்டாடி முடித்த கையோடு சுந்தர் சி தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். ஹாரர் ஜானரில் அரண்மனை என்றால் காமெடி ஜானரில் டிரேட்மார்க் சுந்தர் சி படம் கலகலப்பு. இதுவரை வெளியான இரண்டு பாகங்களும் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கலகலப்பு 3 படத்தின் ஷூட்டிங் தொடங்க ரெடியாகிவிட்டார் சுந்தர் சி. முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா மற்றும் விமல் இந்த பாகத்தில் நடிக்க இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடிய சீக்கிரம் ஹைதராபாதில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம். 2024 , 2025  என அடுத்தடுத்து இரு வெற்றிகளைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார் சுந்தர் சி என்று நம்பலாம்.