Tamilnadu Roundup: ஈரோடு கிழக்கு விறுவிறு வாக்குப்பதிவு.. புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை- தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

Continues below advertisement
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(05.02.25) சவரன் ரூ.63,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 
  • சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(பிப்.05) நடைபெறும் சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுப்பு
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குப்பதிவு
  • நகரம், ஒன்றியம், வட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு
  • டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை(பிப்.06) பேச்சுவார்த்தை நடத்தும் டாஸ்மாக் நிர்வாகம்
  • திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 2ஆவது நாளாக தடை
  • நீலகிரிக்கு வரும் பேருந்துகளில் பிளாஸ்டிக் கண்டறியப்பட்டால், பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணியை தாக்கிய காட்டு யானை.
  •  ஓய்வூதிய திட்டத்தை விரிவாக ஆராய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!
  • தொழிற்சங்கம் அமைக்க கோரி போராடிய 3 பேரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Continues below advertisement