விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கியுள்ள்  விடாமுயற்சி  வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித் ,  த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 

Continues below advertisement

 கடைசியாக 2023 ஆம் ஆண்டு அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து  விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளார்கள். படப்பிடிப்பில் இருந்தபோதே படம் கைவிடப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது , படப்பிடிப்பின் போது கலை இயக்குநர் மிலன் உயிரிழந்ததும் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பிற்கு பின்னும்  பல்வேறு சவால்களை கடந்து படக்குழுவின் தொடர் விடாமுயற்சியால் இன்னும் ஒரு நாளில்  திரைக்கு வர இருக்கிறது விடாமுயற்சி

விடாமுயற்சி டிக்கெட் புக்கிங்

தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் படத்திற்கான புக்கிங் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.இ்ந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய எஸ்டிமேஷன் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

விடாமுயற்சி முதல் நாள் வசூல் 

பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன. இதுவரை விடாமுயற்சி படத்திற்கு 3.25 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவுகள் வழியாக விற்பனையாகியுள்ளன. இதனடிப்பையில் விடாமுயற்சி திரைப்படம் இந்தியளவில் முதல் நாளில் ரூ 7.8 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4.27 கோடியும் கர்னாடகாவில் 20.13 லட்சமும் , கேரளாவில் 5.68 லட்சமும் வசூலாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அஜித் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் எடுத்த படமாக விடாமுயற்சி படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தி கோட் VS விடாமுயற்சி

கடந்த ஆண்டு விஜய் நடித்த தி கோட் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ 31 கோடி வசூலித்து சாதனை படைத்தது. முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது தி கோட். தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை விடாமுயற்சி எட்டுவது கொஞ்சம் கடினம் என்றாலும், படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தால் தி கோட் பட மொத்த வசூலுக்கு விடாமுயற்சி ஒரு நல்ல போட்டியாக அமையும் என்று சொல்லலாம்.