பி சுசீலா
இந்திய சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் ஒருவர் மூத்த பாடகி பி சுசீலா. கடந்த 60 ஆண்டு காலமாக தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , மராத்தி , பெங்காலி , உருது , துலு என பல்வேறு மொழிகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருது வென்ற முதல் பெண் பி சுசீலா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து தேசிய விருதுகள். அதிக பாடல்களை பாடிய கின்னஸ் சாதனை என இவரது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். தற்போது சினிமாவில் பாடல்கள் பாடுவதில்லை என்றாலும் இவரது குரலில் அமைந்த கிளாசிக் பாடல்களை கேட்கும் ரசிகர்கள் எல்லா தலைமுறையிலும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். சமீபத்தில் பி சுசீலா திருப்பதி கோயிலுக்கு சென்று தனது முடியை காணிக்கையாக கொடுத்தது சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவில் நல்ல பாடகர்கள் இல்லை..
சேலத்தை மையப்படுத்திய தனியார் இசைக் குழுவின் 35-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை பி.சுசீலா சமகாலத்தில் தமிழ் சினிமா இசை பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ”என் உடம்பில் இப்போது சக்தியில்லை. இருந்திருந்தால் இன்றைய கால பாடகர்களுடன் சேர்ந்து நானும் பாடுவேன். கடவுள் இன்னும் என்னை அனுமதித்திருக்கிறார். எல்லாம் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்போல. இன்று நல்ல இசை இல்லை , நல்ல பாடகர்கள் இல்லை. கோடம்பாக்கம் தூங்குகிறது. இதை எல்லாம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. எம்.எஸ் விஸ்வநாதன் , கே.வி மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் இருந்த காலத்தில் ஒரு குடும்பம் மாதிரி ஸ்டுடியோவில் நுழைந்துவிட்டால் பாட்டு மட்டும்தான். ஆனான் இன்று அப்படியா” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பி சுசீலாவின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பாடகர் என்றாலும் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையானவை என்கிற தொடர்பான இருபக்க விவாதங்கள் கிளம்பியுள்ளன.
மேலும் படிக்க : Mambo : பிரபு சாலமன் படத்தில் நாயகனாகும் வனிதா விஜயகுமாரின் மகன்.. நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு
Tamannaah : காவாலா பாடலை காப்பியடித்த பாலிவுட்...வைரலாகும் தமன்னாவின் அடுத்த பாடல்