தமன்னா


தனது 15 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறவர் நடிகை தமன்னா. தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கடந்த 19 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் , விஜய் , சூர்யா அதேபோல் தெலுங்கி பிரபாஸ் , அல்லு அர்ஜூன் , மகேஷ் பாபு , ராம் சரண் என இரு துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுடம் திரையில் தோன்றியிருக்கிறார். இது தவிர்த்து சோலோவாக ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களிலும் அடுத்தடுத்து  நடித்து வருகிறார்.


ஹிட் அடிக்கும் பாடல்கள்


கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்த காவாலா பாடல் உலளவில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படத்தில் அச்சச்சோ  பாடலுக்கு தமன்னா நடன்மாடி இருந்தார். இந்த இரு பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படமும் பெரியளவில் வெற்றிபெற்றது. சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இப்போது எல்லாம் ரசிகர்கள் படத்தின் கதை நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பதில்லை தமன்னா டான்ஸ் இருக்கா என்றுதான் பார்க்கிறார்கள் என்றது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. 


இந்த இரு பாடல்கள் இந்தி , தமிழ் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பெரியளவில் கமனமீர்த்த நிலையில் இதே மாதிரியான பாடல்களுக்கு சிறப்பு தோற்றத்தில் தோன்றும் வாய்ப்புகள் தமன்னாவுக்கு அதிகரித்துள்ளன. அந்த வகையில் தற்போது இந்தியில் வெளியாகியுள்ள ஆஜ் கி ராத் பாடலில் தமன்னா காவாலா ஸ்டைலில் நடனமாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


காவாலா காப்பி 






அமர் கெளஷிக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்ட்ரீ 2 படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் வருண் தவான் , பங்கஜ் திரிபாதி , ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆஜ் கி ராத் பாடலில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் நேற்று ஜூலை 24-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடலில் தமன்னாவின் உடை டான்ஸ் மூவ்ஸ் எல்லாம் பார்க்க ஜெயிலர் படத்தின் காவாலா பாடலை ஒத்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.