பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். இதுவரை பொது சமூகம் கண்டுகொள்ளாத இருளர் இன மக்களையும் அவர்களது சந்திக்கும் இன்னல்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
நேற்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்த திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடிவருகின்றனர். படத்தின் ஆரம்ப காட்சியே அதிர்வோடு தொடங்கும் படத்தில் சாதிய ஆதிக்கத்திற்கும், அதிகாரவர்க்கத்திற்கும் எதிராக இயக்குநர் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.
ஜெய் பீம் படத்தை பெரும்பாலானவர்கள் கொண்டாடிவரும் சூழலில் ஜெய் பீம் படம் வன்னியர் சமுதாயத்தை கொடூரமாக சித்தரித்துள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் #ActorSuryaAgainstVanniyars என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது. படத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி (இயக்குநரும், நடிகருமான தமிழ்) கதாபாத்திரம் எளிய மக்கள் மீது கொடூரமாக அதிகார வேட்டையை நடத்தும்.
படத்தின் ஒரு காட்சியில் குருமூர்த்தி ஃபோனில் பேசும்போது பின்னால் தொங்கிக்கொண்டிருக்கும் காலண்டரில் “சத்ரிய குல வன்னிய மாநாடு” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாகவே #ActorSuryaAgainstVanniyars என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch video | கெத்தா.. மாஸா.. வைரலாகும் ‘ஜெய் பீம்' சீன்...