ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் ரேஸில் இந்திய அணி முந்திச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து என இரு முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை இழந்து அரை இறுதிக்கு தேர்ச்சி பெறுவதற்கான ரேஸில் எதிர்ப்பாராதவிதமாக பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களின் ஐபிஎல் பர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, அடுத்த மூன்று போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றை பற்றிய நச் அலசல் இதோ!

ரவிந்திர ஜடேஜா:

vs  பாகிஸ்தான், துபாய் கிரிக்கெட் மைதானம் ; 13 (13) ; 4-28-0

vs நியூசிலாந்து, துபாய் கிரிக்கெட் மைதானம் ; 26* (19) ; 2-23-0

ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி கோப்பையை கைப்பற்றி இருப்பார் ஜடேஜா. ஃபைனல்ஸ் நடைபெற்ற அதே மைதானத்தில், டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இரண்டு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் ஜடேஜாவுக்கு விக்கெட்டுகள் சிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சமாளித்து அவர் பேட்டிங் செய்ததால், இந்திய அணியின் ஸ்கோர் 100-ஐ தாண்டியது.

ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, சிஎஸ்கே அணி விளையாடும் முக்கியமான போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார் ஜடேஜா. அதே போன்றதொரு பர்ஃபாமென்ஸைதான் தேசிய அணிக்காகவும் அவர் தர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். பேட்டிங்கைவிட பெளலிங் அப்ஷனாக ஜடேஜா முன்னிலை பெறுவார். ஆனால், அவரும் பெரிதாக சோபிக்காதது மிகுந்த ஏமாற்றமே. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தலாக விளையாடும் ஜடேஜா டி-20 உலகக்கோப்பையில் இன்னும் மிளிரவில்லை. பொதுவாக சேஸிங்கில் டெத் ஓவர் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அவர், இந்த டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

ஐபிஎல் தொடரில் ரவிந்திர ஜடேஜா: கடைசி ஐந்து போட்டிகளில்: 

vs  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஃபைனல்ஸ்) துபாய் 4-37-2
vs டெல்லி கேப்பிடல்ஸ் (ப்ளே ஆஃப்) ஷார்ஜா  3-23-1
vs பஞ்சாப் கிங்ஸ் துபாய்  15* (17) ; 1-9-0
vs டெல்லி கேப்பிடல்ஸ் அபு தாபி 1* (2) ; 4-28-2
vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஷார்ஜா 32* (15) ; 1-9-0

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண