1956 நவம்பர் ஒன்றாம் தேனி மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு 65 ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இனிப்பு, வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு நாடு விடுதலையான பிறகு சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து இருந்தது. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும், எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சங்கரலிங்கனார், ஜீவா, நேசமணி, மபொசி உள்ளிட்ட பல தமிழக தலைவர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, பல மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நேரு தலைமையிலான மத்திய அரசு குழு அமைத்து மொழி வழி மாநிலங்கள் பிரிக்க சட்டம் இயற்றப்பட்டது. இந்த அடிப்படையில் 1956 நவம்பர் 1ஆம் தேதி சென்னை மாகாணம் உருவானது. பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திரா ,கேரளா கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு விழாவாக அறிவித்து, அரசு விடுமுறையுடன் விழா நடத்தப்பட்டு வருகிறது.




தமிழ்நாடு பிரிக்கப்பட்ட நிகழ்வை  தஞ்சாவூரில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் எல்லை போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி  உறுதிமொழி ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்ற விழாவில், சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணை ப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா, எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டோர் தமிழ்நாடு உருவான நாள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.




நிகழ்ச்சியில், தாய்மொழி தமிழை பாதுகாக்கவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்கவும், தமிழ் மொழியை அழிக்கின்ற இந்தி, சமஸ்கிருதம் திணிப்பை விரட்டியடடிக்கவும், குலக்கல்வி முறையை கொண்டு வரும் புதிய தேசிய கல்வி கொள்கை, இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகியவற்றை திரும்ப பெறவும்,  பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பில் தமிழ் மொழி வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட சட்டம் இயற்றவும் தமிழ் நாடு மற்றும் மத்திய அரசுகளுக்கு கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.


தமிழ்நாட்டின் ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களையும், கனிம வளத்தையும் பாதுகாக்கவும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்தை ஆதரித்தும், இழந்து விட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைந்து சமதர்ம தமிழகம் படைத்திடவும் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்கப்பட்டது. இதே போல் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன் தலைமையில் நவம்பர் 1 தமிழ்நாடு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர். அப்போது பறையடித்து, நிகழ்ச்சியை கொண்டாடினர்.