பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த வனிதா தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார். 


திரைப்படங்கள் நடித்து வந்த வனிதா இடையில் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸில் நுழைந்து விளையாடி வந்த வனிதா இப்போது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், சுய தொழில்,  என பிஸியாக உள்ளார்.


வனிதா ஒரு பேட்டியில் தான் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இது எப்போது என பதறிப்போய் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு,  அவர், சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளேன். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா. 


நடிகர்கள் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியின் பெண் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த வனிதா, சந்திரலேகா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்த போதிலும் அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, குக் வித் கோமாளி, பிக்பாஸ் மற்றும் vlog ஆகியவற்றின் மூலம் தான் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஏராளமானோர் நெகட்டிவ் ஷேட் உடன் திரும்புவதாக ஒரு கருத்து நிலவுகிறது.  ஆனால் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆக்ரோஷமா நடந்து கொண்ட போதிலும், அவர் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொண்டாதாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். 


சமையலில் அதிக ஆர்வம் கொண்ட வனிதா விஜயகுமார் தன்னுடைய யூடியூப் சேனலில் ஏராளமான சமையல் வீடியோக்களை அப்லோட் செய்து வந்தார். இதற்கும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.  இப்படி மீடியாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்து எனர்ஜியுடன் வலம் வந்து கொண்டிருந்த வனிதா பீட்டர் பால் என்பரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.  இது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியான நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து சில யூடியூப் சேனலுக்கு பேட்டியும் அளித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்து விட்டனர். இதனால் வனிதா எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் விமர்சனங்களை எல்லாம் கடந்து புது எனர்ஜியுடன் வலம் வரும் வனிதா,  சொந்தமாக ஒரு பொட்டிக் நடத்தி வருவதுடன், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க 


NDA's 38 Vs Opposition's 26: தேர்தல் பிரமாண்டம்..! பெங்களூரு, டெல்லி.. ஒட்டுமொத்தமாக கூடிய அரசியல் கட்சிகள்..அடுத்து என்ன?


திமுகவையெல்லாம்? வம்ச அரசியல், ’வளர்ச்சியே இதனால்தான் பாதிப்பு’ : விமர்சித்த பிரதமர் மோடி