சூர்யா விலகியதைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது


வணங்கான்


பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் வணங்கான். சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட இந்தப் படத்தில் இருந்து விலகினார் சூர்யா. தற்போது நடிகர் அருண் விஜய்  நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.






முன்னதாக கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் என நாயகன் அருண் விஜய் வைத்திருக்கும் வகையிலான போஸ்டர் ஆதிக்கம் நாத்திகம் பேசும்  இரு தரப்பினரிடமும் கவனம் ஈர்த்தது. பாலா இப்படத்தில் சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையை கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 



இந்நிலையில் இன்று  வணங்கான் படத்தின் டீசர் வெளியாகி  உள்ளது. முன்னதாக  அருண் விஜய் ஒரு கையில் பிள்ளையார் மறு கையில் பெரியாரின் சிலையை சாக்கடையில் இருந்து எடுப்பது போல் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கடவுள் என்றாலும் கடவுளை மறுத்த ஒருவர் என்றாலும் இரண்டையும் அரசியல் லாபத்திற்காக ஒவ்வொவர் தங்களது சுய லாபத்திற்காக எப்படி பயன்படுத்திக் கொளிகிறார்கள் என்பது இதன் அர்த்தமாக புரிந்துகொள்ளலாம். தற்போது வெளியாகியுள்ள டீசரின் மூலம் வெளிப்படுவதும் அதுவே. ஆன்மிகவாதிகளாக, அரசியல் தலைவர்களாக வேஷம் போட்டிருக்கும் பலர் இந்த டீசரில் காட்டப் படுகிறார்கள். கதாநாயகனான அருண் விஜய் தலைமுடியிலும் கடைசி ஷாட்டிலும் பிதாமகன் படத்தில் விக்ரமை நினைவு படுத்துகிறார்.  பாலாவின் வணங்கான் தற்போதை அரசியல் சூழலில் ஒரு தனிநபரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப் படுகிறது அதை எதிர்த்து அவன் என்ன செய்கிறான் என்பதை மைய கதையாக  கொண்டிருப்பதன் சாத்தியங்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை வழக்கம் போல்  மிரட்டலான ஒரு உணர்ச்சியை அளிக்கிறது.




மேலும் படிக்க ; 24 Years of Mugavaree: 24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!


Siragadikka Aasai: கடனை திருப்பி செலுத்த 3 நாள் கெடுவைத்த சிட்டி: சிறகடிக்க ஆசையில் இன்று!