சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


முத்து கிச்சனில் நின்று மீனாவிடம் பேசுகிறார். அப்போது, மீனா தெரியாமல் கையை சுட்டுக் கொள்கிறார். அப்போது முத்து உடனடியாக மீனாவைப் பிடித்து, “பார்த்து” என்கிறார். அதற்கு மீனா, ”வேண்டாம் பேச்சுக்காக காட்டுற அக்கறை எதுவும் வேண்டாம்” என சொல்கிறார். ”சின்ன பையன்ங்க அவன், படிப்பு வாழ்க்கை இதெல்லாம் நீங்க கொஞ்சம்கூட யோசிச்சுப் பார்க்கல இல்ல. எங்க வீட்ல ஒரு ஆளா இருந்தா யோசிச்சுப் பார்த்து இருப்பிங்க. நாங்க தான் மூனாவது மனுஷங்களாச்சே” என்கிறார் மீனா.


விஜயா பார்வதிக்கு போன் செய்து, ”இவன் மறுபடியும் அவள மிதிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த பூக்கட்டுறவளும் உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா.  இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு” என்கிறார். ”இப்போ பார்த்தியா வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிடுச்சி” என்கிறார் விஜயா. அது எப்படி விஜயா உங்க வீட்டுல மட்டும் தினுசு தினுசுசா பிரச்சனை வருது?" எனக் கேட்கிறார் பார்வதி,  அதற்கு, ”தகுதி தராதாரம் இல்லாத பொண்ணைக் கொண்டு வந்தா இப்படி தான்” என்கிறார் விஜயா. 


விஜயா, போனை வைத்து விட்டு திரும்பி பார்த்ததும், அண்ணாமலை அங்கு நின்று கொண்டு இருக்கிறார். ”நீ கீழ போ உன்னைப் பத்தி நான் போன் பண்ணி பரசுக்கிட்ட சொல்லிட்டு வரேன்” என்கிறார் அண்ணாமலை. ”அது என்ன பழக்கம் உனக்கு? குடும்ப விஷயத்தை பத்தி இப்படி ஊரு ஃபுல்லா சொல்ற.  சந்தோஷமா வேற சொல்ற” என்கிறார். ”அவங்க கதையை நான் மத்தவங்க கிட்ட சொல்லாம இருந்தாலும் அவங்க கதை என்ன வெளியே தெரியாமலேயா போகப்போகுது? லோக்கலான ஆளுங்க  தானே” என்கிறார் விஜயா. “உங்க அப்பா அம்மா மட்டும் என்ன லண்டன் துரையோட குடும்பமா?” எனக் கேட்கிறார் அண்ணாமலை.


சிட்டி கார் ஷெட்டுக்கு சென்று முத்துவின் நண்பர்களிடம் ”வட்டி வேண்டாம் 3 நாளில் என் அசல் பணத்தை கொடுங்க” என்கிறார். உடனே செல்வத்தின் நண்பர்கள் ”உன் கோவத்தால தான் இப்போ இப்படி எல்லாம் நடக்குது” என்கின்றனர். ஸ்ருதி ரவியிடம் “நாம் முதல் முதல்ல சந்தித்த நாளை நீ நியாபகம் வச்சிக்கல” எனக் கூறி  சண்டைப் போடுகிறார். ஸ்ருதி பின் அண்ணாமலையிடம் சென்று ”நீங்க முதல் தடவை எப்போது அத்தையைப் பார்த்தீங்க?” எனக் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை வருடம் தேதியுடன் சரியாக பதில் சொல்கிறார். பின் விஜயாவிடம் சென்று ஸ்ருதி கேட்கிறார். ஆனால் விஜயாவிற்கு எதுவும் நியாபகம் இல்லை.


ஸ்ருதி உடனே ”உனக்கு உங்க அம்மாவோட மெண்டாலிட்டி தான் இருக்கு” என ரவியைத் திட்டுகிறார். “அங்கிள் உங்களை பர்ஸ்ட் டைம் பார்த்த தேதியை சரியாக சொன்னங்க” என்றதும் விஜயா வெட்கப்படுகிறார். மற்றொரு புறம் முத்துவின் கார் ஷெட்டுக்கு சிட்டி சென்றிருக்கிறார். அப்போது முத்துவைப் பார்த்து காலில் விழ வந்துட்டாரு என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.