சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹெச். வினோத் அஜித்துடன் நேர்கொண்ட பார்வையில் பணியாற்றினார். அதனையடுத்து அஜித்துடன் வலிமை படத்திலும் பணியாற்றியுள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் அப்டேட்கள் ஆரம்பத்தில் வராமல் இருந்தாலும் சமீபமாக தொடர்ந்து அப்டேட்களாக வெளிவருகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் நாங்க வேற மாதிரி என்ற பாடலும், அம்மா பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தின் க்ளிப்ஸ் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து சில நாள்களுக்கு முன்பு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது. அதில் அஜித் பைக் ஓட்டுவது போலவும், பைக்கிலிருந்து விழுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றன.படமானது 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வலிமை படத்திற்கான தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் வாங்கியிருந்தார். இந்த சூழலில், வலிமை படத்தின் வட அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. இதனை அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Ganguly on Virat Kohli: “நோ கமெண்ட்ஸ்” : டீல் பண்ண தெரியும்.. கோலி பேச்சுக்கு பதிலளித்த கங்குலி..