தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளுக்கு நான் தயாராக இருக்கிறேன் எனவும் பிசிசிஐயிடம் தான் ஓய்வு கேட்கவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், “இது குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை முறையாக கையாள்வோம். இதை பிசிசிஐயிடம் ஒப்படைக்கிறேன்” என தனியார் பத்திரிக்கைக்கு கங்குலி பதில் தெரிவித்திருக்கிறார்.


தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.


முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 


இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும், டி20 கேப்டன்சியில் இருந்து கோலி விலகியது பற்றி அவர் மனம் திறந்திருக்கிறார். அதில் “நான் என்னுடைய முடிவை அறிவித்தபோது பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ தெரிவித்தது” என போட்டு உடைத்திருக்கிறார்.






ஆனால், கோலி சொல்லியதற்கு முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருப்பது. கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி அவர் பேசும்போது, “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்திருந்தார். 


கோலி, கங்குலியின் கருத்துகள் வேறுபட்டிருப்பதால், கிரிக்கெட் வட்டாரமும், ரசிகர்களும் உண்மை எது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், கங்குலி இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதால், இந்த விவகாரம் பெரிதாகும் என தெரிகிறது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண