இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரபல பாடலாசிரியரும் பாரதிராஜாவின் நண்பருமான வைரமுத்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாடல் பாடி உற்சாகமூட்டினார். இது தொடர்பாக வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ”எழுந்து வா இமயமே” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன் பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, உட்பட ப் தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவர் ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், முதல் மரியாதை, கன்னத்தில் முத்தமிட்டால் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இயக்குநர் பாரதிராஜா தனது முதல்படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே தமிழ் சினிமா அதுவரை பின்பற்றிய எல்லா இலக்கணங்களையும் உடைத்து வெற்றி கண்டார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் பாரதிராஜா.
இவரது திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜி கணேசனை அதுநாள் வரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடுத்தர வயதை கடந்துவிட்ட ஒரு ஆணுக்கு வரும் காதலை படமாக்கி பலரின் மனங்களையும் தொட்டார். இப்படி பல வேறுப்பட்ட கதைகளை ரசிக்கும் விதத்தில் படமாக்கியவர் பாரதிராஜா.
ஆறு முறை தேசிய விருதுகளையும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் பாரதி ராஜா. பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான பாரதி ராஜா தன்னுடைய 81 ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் தற்போதைய இளம் நடிகர்களின் படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்கலில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் படிக்க,