அரசு ஊழியருக்கு எதிராக விவசாயி தீக்குளிக்க முயற்சி; நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியருக்கு எதிராக விவசாயி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement
நாகை: வட்டியும் முதலுமாக பணத்தை கொடுத்த பிறகும் அசல் பத்திரத்தை கொடுக்காமல் அரசு ஊழியர் அலைக்கழிப்பதாக விவசாயி ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருவாரூர் மாவட்டம் தென்ஓடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜ்குமார். இவர் கடந்த கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் நாகை உதவி இயக்குனர் ஊராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் மாரியப்பன் என்பவரிடம் விவசாய பணிகளை மேற்கொள்ள 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு தனது வீட்டு பத்திரத்தை வைத்து  கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்திய நிலையில் மாரியப்பன் அசல் பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுதொடர்பாக பல நாட்கள் மாரியப்பன் பணியாற்றும் அலுவலக படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய ராஜ்குமார் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த ராஜ்குமார் திடீரென மறைத்து கேனில் வைத்திருந்த டீசலை தலை மற்றும் உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டீசல் கேனை பிடுங்கி அவரது மனுவை பெற்றனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக அரசு ஊழியர் மாரியப்பன் அசல் பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள ராஜ்குமார் ஆவணத்தை பெற்றுத்தந்து நாகை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியருக்கு எதிராக விவசாயி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ராஜ்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்ற நாகூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Continues below advertisement

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
Continues below advertisement
Sponsored Links by Taboola