தமிழ் சினிமாவின் காமெடி அரசர்களில் ஒருவரான வடிவேலுவுடன் நடித்தவர் கே.ஆர். ரங்கம்மாள் (75).  “ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று வடிவேலுவிடம் சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பும், அவரது முகமும் நமது பாட்டிகளை நினைவுப்படுத்தாமல் இல்லை. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்த ரங்கம்மா பாட்டிக்கு தற்போது போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமையில் சிக்கியுள்ளார்.




 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்றார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டு கொண்டு அவருடன் ‘செல்ஃபி’ எடுத்தனர்.




இந்த சூழலில் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் ஆதரவின்றி இருந்த ரங்கம்மா பாட்டியை, உறவினர்கள், அவர் பிறந்த ஊரான கோவைக்கே அழைத்துச்சென்று, கவனித்து வருகின்றனர். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் தான் மீண்டும் நடிப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.


Kasi Theater Owner: ‛விஜய் மாறுவேஷத்துல வருவார்... ஸ்க்ரீனை கிழிப்பாங்க... சங்கர் உட்காரமாட்டார்’ FDFS அனுபவங்கள் பகிரும் காசி தியேட்டர் ஓனர்!


இவர் திடீரென்று சினிமாவுக்குள் நுழைந்தவர் இல்லை. கண்ணதாசன் காலத்திலிருந்தே சினிமாவில் இருக்கிறார். சூரியகாந்தி படத்தில் கண்ணதாசன் எழுதி திரையில் தோன்றிய, “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா” பாடலில் ஜெயலலிதாவுக்கு அருகில் அமர்ந்திருப்பது இவர்தான்.


Valimai Ghibran | வலிமையில் யுவனுக்கு பதில் ஜிப்ரான்.. உறுதியான தகவல்.. காரணம் உடைக்கும் பிஸ்மி..!


இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ கண்ணதாசன் எழுதிய பரமசிவன் கழுத்திலிருந்து பாடலில் ஜெயலலிதா அருகில் அமர்ந்திருந்தது நான்தான். என்னை பார்த்தால் ஜெயலலிதாவின் தாயான சந்தியாவுக்கு அவ்வளவு பிரியம். ஜெயலலிதாவுக்கு சோறு ஊட்டிவிட சந்தியா என்னிடம் சொல்வார்கள். நானும் ஜெயலலிதாவுக்கு ஊட்டிவிட்டிருக்கிறேன்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Ajith 61 | அஜித் வில்லனா? டபுள் ரோலா? ஷூட்டிங் எப்போ? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் AK 61 அப்டேட்ஸ்..


Vanjam Theerthayada | ”ஊருணி நீரைப்போல் இளையராஜாவின் இசையை பருகினேன்” இசைஞானியுடன் இணையும் சுசிகணேசன்


https://tamil.abplive.com/entertainment/my-son-won-t-watch-my-instagram-why-did-i-went-for-tasmac-vj-maheshwari-answers-34489/amp