ஹச்.வினோத் ,இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வலிமை. படம் வருகிற 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , கொரோனா பேரச்சம் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கபப்ட்டுள்ளது. அஜித்தின் 60 வது படமான வலிமை படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.அஜித் படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறாரா அல்லது யுவன் இசையமைக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்.


ஜிப்ரான் அஜித்தின் வலிமை படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.இந்த செய்தியை தொடர்ந்து தற்போது சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் 61 வது  படத்தில் அஜித் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளாராம்.  ஹச்.வினோத் , அஜித்தின் 61 வது படத்திற்காக இரண்டு மூன்று கதைகளை அஜித்திடம் சொன்னாராம் அதில் அஜித் இந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியதால் அதையே படமாக்குவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. முன்னதாக ஹச்.வினோத்  அஜித்தின் 61 வது படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் குறைவாகவும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் , டயலாக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறியிருந்தார். 







வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் வரிசையில் அஜித்தின் 61 வது படமும் அமையும் நெகட்டிவ்  ஷேடாக அமைய இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அஜித்தின் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறதாம். இயக்குநர் கொடுத்த ஹிண்டின் அடிப்படையில் பார்த்தால் ஒரு வேளை படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாக இருக்குமோ என கிசு கிசுக்கப்படுகிறது. அஜித் 61 வது படத்தின் பூஜை வருகிற 17 ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகமானால் பூஜை ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.  


இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வருகிற மார்ச் மாதம் 9 ஆம் தேதி அஜித் 61 வது படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு புறம் இருக்க அஜித்தின் வலிமை படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ரசிகர்கள் பேனர் வைத்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்திற்கான ஓடிடி ஆஃபர்கள் எக்கச்சமாக வருகிறதாம் .ஆனால் படத்தை திரையரங்கில்தான் வெளியிடுவோம் என திட்டவட்டமாக இருக்கிறார்களாம் படக்குழு. ஊரடங்கு தளர்வு கண்டவுடன் முதலில் வெளியாகும் திரைப்படம் வலிமையாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.