Jawan Releasing: வரும் 7ம் தேதி ஜவான் ரிலீசாக உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 300 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.


ஜவான்:


அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஜவான் படம் வரும் 7ம் தேதி ரிலீசாக உள்ளது. தீபிகா படுகோன், விஜய்சேதுபதி என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி, யோகிபாபு என படக்குழுவினர் பங்கேற்றனர்.


ஷாருக்கான் பங்கேற்ற விந்த விழாவில் ஏராளமானோர் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கடந்த 31ம் தேதி வெளியான படத்தின் டிரெய்லர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ’ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. அவன் அடுத்தடுத்த போர்ல தோற்றுப் போனானாம்’ என வசனங்களும், ஷாருக்கானின் மிடுக்கான போலீஸ் தோற்றமும் டிரெய்லரை அதகளப்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கவிட்டுள்ளார் அட்லீ. 






 


டிக்கெட் முன்பதிவு


கொரோனா பரவலால் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜவான் படம் தற்போது ரிலீசாக உள்ளதால் ஷாருக்கான், நயன் தாரா உள்ளிட்டோரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ரிலீசை ஒட்டி டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. வரும் வியாழக்கிழமை படம் ரிலீசாவதால் PVR, INOX, Cinepolis உள்ளிட்ட திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்  PVR மற்றும் INOX திரையரங்கில் 1,68,000 டிக்கெட்டுகளும், Cinepolis 35,000 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ஒரே நாளில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 300 டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 










மேலும் படிக்க: Kushi Box Office: அமர்க்களமான ஓப்பனிங்.. சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' 2 நாள்கள் வசூல் இவ்வளவா?


Iraivan Trailer: ஒன் டூ த்ரீ.. முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் வெளியீடு!