தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Continues below advertisement


இந்த நிலையில், கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் நாயகன் விக்ரம், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இர்பான் பதான், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.




அப்போது, அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, “விக்ரம் படத்தில் கமல்ஹாசன் சார் என்ன செய்துள்ளாரோ, அதைத்தான் கோப்ரா படத்தில் விக்ரம் செய்துள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார். கோப்ரா படத்தில் விக்ரம் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் முதல் பாடலாக வெளியான ஆதிரா ஆதிரா பாடலில் இந்த ஏழு கெட்டப்புகளுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ரசிகர்களை கட்டிப்போட்டது.


படத்தின் வெளியீட்டாளரான உதயநிதி ஸ்டாலின், கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள 15 நிமிட காட்சிகளையும் நேற்று பார்த்தாக கூறியுள்ளார். விக்ரம் படத்தையும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படத்தில் விக்ரமுடன், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.ஜி.எப். பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகை மியாஜார்ஜ், மிருணாளினி ரவி, பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் நடிப்பில் மகான் படத்திற்கு பிறகு வெளியாகும் படம் கோப்ரா என்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்காவான ஆக்‌ஷன் படமாக கோப்ரா வெளியாவதாலும், பல்வேறு கெட்டப்புகளை விக்ரம் இந்த படத்திற்காக மெனக்கெட்டு போட்டுள்ளதாலும் படத்தின் மீது பன்மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படமும் வரும் செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர, கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் உருவாகியுள்ள துருவநட்சத்திரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண : Vikram Speech: ”லைஃப்ல எவ்வளவோ பார்த்துட்டேன், இதெல்லாம் ஒன்னும் பண்ணாது”... ரசிகர்களை தேற்றிய விக்ரம்..!


மேலும் செய்திகளை காணCobra Audio Launch : ”உங்களை மாதிரி நானும் இங்க ரசிகனாதான் வந்திருக்கேன்”.... கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் துருவ்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண