தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடீயோஸ் புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா (இன்று) ஜுலை 11 ம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவித்தது. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் நேற்று முன் தினம் தனக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி குறித்து பேசினார். அப்பொழுது பேசிய அவர், ”கைய நெஞ்சுல வைக்கக்கூடாது போல, உடனே மாரடைப்புன்னு சொல்லிருவாங்க. லைப்ல எவ்வளவோ பார்த்துட்டேன், இதல்லாம் ஒன்னும் பண்ணாது. சின்ன டிஸ் கம்பர்ட் இருந்தது அதனால்தான் நான் மருத்துவமனைக்கு சென்றேன். ரசிகர்கள் ரொம்ப வருத்தப்பட்டங்க அதான் நான் நல்லா இருக்கேன் சொல்லத்தான் இங்க வந்தேன். நெஞ்சு வலி பிரச்சினையில, ரொம்ப கச்சா முச்சான்னு பண்ணிட்டாங்க. எனக்கு ஒன்னும் இல்ல என்று தெரிவித்தார். 

தொடர்ந்து கோப்ரா படம் குறித்து விக்ரம் பேசுகையில், நமக்குன்னு ஒரு கனவு இருந்தா, உழைச்சா அந்த இடம் கிடைக்கும். அதற்கு உதாரணம் ஏ. ஆர். ரஹ்மான்தான். ஏ ஆர் ரஹ்மான் தவிர வேற யாராலும் இதை செஞ்சி ருக்க முடியாது.உதயநிதிக்கு ஒரு ஞானம் இருக்கு. அவர் வாங்குறாருன்னு கேள்வி பட்டதும் எனக்கு பெரிய பாரமே குறைஞ்சது. பதான் ரொம்ப நல்ல பண்ணி இருக்காரு. அஜய் தொடர்ந்து வேலை செஞ்சிட்டே இருப்பாரு. ஏழு விதமான குரல்கள் இதுல ட்ரை பண்ணி இருக்கேன் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண