காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 72 -ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 410, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 382.
தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு நீக்கபட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அலட்சியமாக செயல்படகூடாது, அதேபோன்று அண்டை மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாலும் மக்கள் மிகுந்த விழிப்புணவுடன் இருக்க வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. முககவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்பட கூடாது என்றனர்.
மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியபோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பர வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.