தீவிர கமல்ஹாசன் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தை 50 முறை பார்த்து சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement

லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவர் செய்த செயலை அங்கீகரித்து இந்த உலக சாதனை விருதை வழங்கியுள்ளது.

எல்லோரும் அவர் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, வித்தியாசமான செயல்களை செய்து உலக சாதனை செய்வது உண்டு. அதுபோல், சலிக்க சலிக்க திரைப்படத்தை பார்த்து ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement

உதய பாரதி என்ற ஒரு நபர் அவரது, ட்விட்டர் பக்கத்தில் விருது பெற்ற போட்டோவை ஷேர் செய்து, “ விக்ரம் படத்தை 50 முறை பார்த்து சாதனை செய்துள்ளேன். என்னை கெளவுரவித்த லின்கன் புக் அஃப் ரெக்கார்ட்ஸுக்கு நன்றி. எனக்கு மன நிம்மதி தரும் ஒரே நபர், கமல்ஹாசன் தான்.” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், விக்ரம் படம் அதன் 100 வது நாள் வெற்றியை கொண்டாடியது. சைமா 2022 விருதுகளின் போது, லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம் அங்கீகரிக்கப்பட்டது. உலகளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மேலும் படிக்க : SIIMA Awards Winners: தட்டித்தூக்கிய தமிழ் சினிமா.. சைமா மேடையை அலறவிட்ட தமிழ் பிரபலங்கள்.. யார் யாருக்கு விருது?

Vadivelu Birthday Special: நேசமணி தொடங்கி பிச்சுமணி வரை... நடிகர் வடிவேலுவின் டாப் மீம் டெம்ப்ளேட்கள்!