சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற தமிழ் பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். 


2021 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. (10-09-2022) மற்றும் (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


 






நேற்றைய விருது நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விருதுகள் வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இன்று தமிழில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 


பட்டியல் பின்வருமாறு:-


1. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கர்ணன் படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனுக்கு வழங்கப்பட்டது. 


 






2. சிறந்த துணை நடிகைக்கான விருது கர்ணன் படத்தில் தனுஷ் அக்காவாக நடித்த லட்சுமி பிரியாவிற்கு வழங்கப்பட்டது. முன்னதாக இவருக்கு சிவரஞ்சினியும் சில பெண்களும் படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 


3. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வினுக்கு வழங்கப்பட்டது.  


 


4.சிறந்த துணை நடிகருக்கான விருது  ‘தலைவி’ படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது. 


 






5.சிறந்த இயக்குநருக்கான விருது  ‘மாஸ்டர்’ படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு வழங்கப்பட்டது.  


 






6.சிறந்த படத்திற்கான விருது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான  ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு வழங்கப்பட்டது. 


7.சிறந்த நடிகருக்கான கிரிட்டிக்ஸ் விருது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது.    






8.சிறந்த நடிகருக்கான விருது மாநாடு படத்திற்காக நடிகர் சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டது. 


 






9. அதே போல சிறந்த நடிகருக்கான விருது  (லீடிங் ரோல்) டாக்டர் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. 






10. Decade of Excellence in South Indian விருது சினிமா துறையில் 10 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகை ஹன்சிகாவிற்கு வழங்கப்பட்டது. 


 






11. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது டாக்டர் படத்திற்காக நடிகை பிரியங்கா மோகனுக்கு வழங்கப்பட்டது. 






12.சிறந்த நடிகைக்கான (லீடிங் ரோல்) தலைவி படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்டது. 


13.மிகச்சிறந்த நடிப்புக்கான விருது மண்டேலா படத்தில் நடித்த யோகிபாபுவிற்கு வழங்கப்பட்டது. 


 






14. சிறந்த பாடகிக்கான விருது கர்ணன் படத்தில்  ‘உட்ராதீங்க எப்போ’ பாடல் பாடியதற்காக  பின்னணி பாடகி அதிதிக்கு விருது வழங்கப்பட்டது. அவரது சார்பாக அவரது தந்தையும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் வாங்கிக்கொண்டார்.