எனக்கு விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. திருமணம் ஆன பின்னர் எனக்கு விவாகரத்து செய்ய பிடிக்காது என நடிகை த்ரிஷா வெளிப்படையாக பேசியுள்ளார்.


இருபது வயதுக்கு பிறகு, மாடலிங் துறையில் இருந்த த்ரிஷா மெல்ல மெல்ல கோலிவுட் சினிமாவின் நடிகையாக மாறினார். அப்படியாக பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து, இன்றளவில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார். கில்லியில் பயந்த சுபாவமாக நடித்த தனலட்சுமியாகவும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக்கின் ஜெஸியாகவும், 96 படத்தில் ராமின் பழைய காதலியாகவும் நடித்து இவர் கவர்ந்த மனங்கள் ஏராளம்.. த்ரிஷாவின் அறிவோ தாராளம்.


இப்படியான சூப்பர் நடிகை, மணிரத்தினம் படைத்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக, இளைஞர்களின் மனதில் அமர்ந்தார். இன்னும் சொல்லப்போனால், படத்தை விட பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலர் கலர் உடையில் தேவதையாய் தோன்றினார்.






இப்படிப்பட்ட அழகிய தேவதைக்கு இன்னும் திருமண வாழ்வு என ஒன்று அமையவில்லை என பல ரசிகர்கள் வருந்துகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு, தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்ற இவர் பந்தம் அப்படியே நின்றது. 


ஹைதராப்பாத்தில் பேட்டி கொடுத்த த்ரிஷா கூறியதாவது, “என்னிடம் பலரும் எனது திருமண வாழ்வை பற்றி கேள்வி கேட்கின்றனர். சில சமயம் இப்படி பட்ட கேள்வியை கேட்கும் போது சலிப்பாக உள்ளது. திருமணம் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அது, நான் யாருடன் இருக்கிறேன், எனக்கு பிடித்தவராக இருக்கிறாரா, இவர்தான் எனக்கானவர் என்ற உறுதி எனக்குள் வரவேண்டும். விவாகரத்து மீதும் எனக்கு துளி கூட நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டு நான் அந்த பந்தத்தை முறிக்க மாட்டேன், அது எனக்கு பிடிக்காது. எனக்கு தெரிந்த சில மக்கள் அவர்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம், அதை நான் விரும்பவில்லை. 


மேலும் படிக்க : “அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை; நயனுக்கு குழந்தைகள்னா ரொம்பவே பிடிக்கும்” - கலா மாஸ்டர்