திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு.. ”பஞ்சப்பூரில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதீப்பீடு 349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. அடுத்த ஒரே ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும். அடுத்த நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும். அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை 966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிகள் இனி நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும். நகர்பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம் மழையின் காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுவது உண்மை தான்" என்றார். 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழை வெள்ளம் வந்தவுடன் திமுகவின் சாயம் வெளுக்கும் என பேசி வருவது குறித்த கேள்விக்கு.. ”5000 கோடிக்கு மேல் வெள்ள தடுப்பு  பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுகவின் சாயமெல்லாம் வெளுக்காது. சாயம் போகாத கட்சி தான் திமுக.




மேலும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பல்வேறு பயன்பாட்டு மையம் கனரக சரக்கு வாகனம் முனையம் ஓராண்டிற்குள் இப்பணிகள் முடிவடையும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


திருச்சி காவிரி பல பணிகள் தாமதமாவதற்கு கடந்த காலத்தில் பாலத்தை சம்மட்டியால் வைத்து அடித்து உடைத்து விட்டனர். ஆகவே தாமதம். மூன்று மாத காலத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.




மேலும் இந்நிகழ்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில், சிவப்பு கார்பெட் விரித்து மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பூந்தொட்டிகளும் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கட்டுமான பணிகளை துவக்கி வைக்க அமைச்சர் நேரு வந்த போது, அங்கிருந்தவர்கள் சில பூந்தொட்டிகளை நகர்த்தி வைத்தனர். அப்போது ஒரு பூந்தொட்டிக்கு கீழே, இரண்டு அடி நீளத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துகிடந்தது. அமைச்சர் வரும் நேரத்தில், பாம்பை கண்டு பதறிய கட்சிக்காரர் பாம்பு தலையை காலால் மிதித்து கொன்றார். உடனடியாக அங்கிருந்த துப்புரவு பணியாளர் அந்த பாம்பை அப்புறப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.