• அதானி விவகாரம்: மோடிக்கு 100 கேள்விகளை கேட்டு புத்தகம் வெளியிட்ட காங்கிரஸ்


அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க அதனை அதானி குழுமம் மறுத்தது.  இந்நிலையில் இவ்விவகாரத்தில் 100 கேள்விகள் கொண்ட புத்தகத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க



  • 'ஹலோ, மிஸ்டர் மோடியா'...போன் ஒட்டு கேட்கப்படுவதாக மீண்டும் பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி..!


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் ஒரு அங்கமாக, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருடன் உரையாடினார். அப்போது பெகாசஸ் தொழில்நுட்பம் குறித்து பேசிய ராகுல், எனது போன் ஒட்டு கேட்கப்படுவது எனக்கு தெரியும்" என்றார். பின்னர், கலாயக்கும் விதமாக, தனது போனை எடுத்த ராகுல் காந்தி, யார் பேசுவது 'ஹலோ, மிஸ்டர் மோடியா' என கேட்டார். மேலும் படிக்க



  • மல்யுத்த வீராங்கனைகள் மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்காங்க.. குற்றம்சாட்டப்பட்ட ப்ரிஜ் பூஷண் சிங் பேச்சு


தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைப்பதாகவும், தன் மீதான ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபணமானாலும் தான் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் ப்ரிஜ் பூஷண் சிங். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  • பாடிக்கொண்டிருக்கும் போதே அதிர்ச்சி.. பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு.. யார் காரணம்?


பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகி நிஷா உபாத்யாய் பீகார் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அது எதிர்பாராதவிதமாக பாடகி நிஷாவின் இடது தொடையை தாக்கியது.  இதுதொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் படிக்க



  • தனக்கு Z+ பாதுகாப்பு தேவையில்லை.. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர்..


பஞ்சாப் முதல்வர் பகவந்த் மனுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால் அவருக்கு 'இசட்-பிளஸ்' வகை ஆயுதப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர் தனக்கு Z+ பாதுகாப்பு தேவையில்லை என்று உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) கடிதம் எழுதியுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தானின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், முதல்வரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க