‛எனக்கு மாதவன் மாதிரி மாப்பிள்ளை வேணும்…’ என, பெற்றோரை இளம் பெண்கள் நச்சரித்த காலம் அது. ‛நீயென்னா மாதவனா…’ என நண்பர்கள், சக நண்பரை கலாய்த்ததும் அதே காலம் தான். ‛மேடி’ என அனைவராலும் செல்லமாய் அழைக்கப்பட்ட மாதவனுக்கு இன்று 51வது பிறந்தநாள்.




 90’s கிட்ஸ்களின் ஆதர்ஸ நாயகன். சாக்லெட் பாய், சைலண்ட் பாய் என்றெல்லாம் கலாய்த்தவர்கள் தான், பின்னாளில் தலையில் வைத்து கொண்டாடினார்கள். ஷம்செத்பூரில் 1970 ஜூன் 1ல் பிறந்த மாதவன், இன்று இந்திய சினிமாவின் ஐக்கான். இதெல்லாம் ஒரு இரவில் நடந்து முடிந்ததல்ல. போராட்டம், வலிகளை கடந்து இறுதிபோட்டிக்கு வந்தவர் தான் மேடி.



சென்னை வேண்டாம்; மூட்டை கட்டிய மாதவன்!


இந்திய சினிமாவில் பல நட்சத்திரங்களின் துவக்கம், டிவி நிகழ்ச்சியாக தான் இருக்கும். அந்த வரிசையில் மாதவனின் துவக்கமும். மனேகி அப்னி பாத் என்ற இந்தி டிவி தொடரில் துவங்கியது தான். அலைபாயுதே! தமிழில் முதல்படம். அதுவும் மணிரத்தினம் படம். ஒரு புது முக நடிகருக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? மாதவனுக்கும் அப்படியே இருந்தது. இளசுகள் கொண்டாடினாலும் பெருசுகளின் ஏசலுக்கு ஆளானது அலைபாயுதே. வீட்டை எதிர்த்து திருமணம் செய்யலாம் என்கிற கதை தான் அதற்கு காரணம்.  புதுமுக நடிகர்களுக்கு அது எவ்வளவு பெரிய அழுத்தத்தை தந்திருக்கும். ‛இனி நமக்கு சென்னை செட் ஆகாது… மூட்டைய கட்டுறா…’ என முடிவு செய்த மேடி, தேவி தியேட்டரில் அலைபாயுதே காட்சியை கடைசியாக பார்த்துள்ளார். அப்போது, தியேட்டரில் பறந்த துப்பட்டாக்களின் ஆதரவு தான், மாதவனை யூடர்ன் போட்டு, சென்னையில் மீண்டும் டெண்ட் அடிக்க வைத்துள்ளது.



நாங்க அடிச்சா ரத்தம் வராதா… ரூட் மாத்திய மேடி!


நாம் ஒரு முடிவு எடுக்கும் போது, அதில் உறுதியாக இருந்தால், அது நிச்சயம் நமக்கான முடிவாக இருக்கும். அப்படி தான் மாதவனின் முடிவுகள் இருந்தது. மின்னலே! 2001ல் வெளியான அத்திரைப்படத்தை 90’s கிட்ஸ் தலையில் வைத்து தான கொண்டாடினார்கள். ‛மேடி… மேடி..’ என, ஓப்பனிங்கில் துவங்கி, ‛வெண்மதி வெண்மதியே நிள்ளு…’ என, பினிசிங் செய்வது வரை மேடி, இளசுகள் மனதில் மாடி ஏறினார். அதன் பின் அந்த இடத்தை யாருமே எட்ட முடியவில்லை. அடுத்தடுத்து ரொமான்ஸ் ஹீரோ மோடில் இருந்த மேடியை, ஆக்ஷன் ஹீரோவாக்கியது ரன்! ‛உங்க அண்ணன் அடிச்சா தன் ரத்தம் வருமா… நாங்க அடிச்சா ரத்தம் வராதா…’ என டயலாக் பேசி, இளம்பெண்களிடம் இருந்த அதே கிரேஸை, இளைஞர்களிடம் பெற்றார் மேடி. அதன் பின் மேடி, மாதவனாக மாறினார். அவரது தேர்வுகள் கதையம்சங்களை கொண்டதாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், நளதமயந்தி, ஆயுத எழுத்து என வேறு ஜானருக்கு பயணிக்கப்பட்டார்.


63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!



 இனி காலி தான் என்றனர்…!


உலக நாயகன் கமலின் அன்பை பெற்ற நடிகராக வலம் வந்த மாதவன், அதன் பின் அவரது ஆலோசனைகளை அதிகம் பெற்றார். அதுவே அவரது கதை தேர்வில் மாற்றத்திற்கு காரணமாகவும் இருந்தது. கமிர்ஷியலை கைவிடும் போது, அதன் எதிர்வினை மோசமாக இருக்கும். அப்படி தான் இருந்தது மாதவனுக்கு. அடுத்தடுத்து பெரிய அளவில் படங்கள் போகவில்லை. ஆனாலும் எண்ணிக்கை குறையாமல் ஆண்டுக்கு சில படங்கள் என வெளியாகிக் கொண்டிருந்தது. இந்தியில் இன்னும் கவனிக்கப்பட்டார். இதனால் தமிழில் கேப் விழுந்தது. இனி மாதவன் அவ்வளவு தான் என பேசிக்கொண்டிருந்த போது, 2012ல் வேட்டை ரிலீஸ் ஆகி, வேட்டையாடியது. ரன் அடித்த லிங்குசாமியின் கூட்டணி. மீண்டும் ஒர்க் அவுட் ஆனது. 4 ஆண்டுகளுக்கு பின் 2016ல் இறுதிச்சுற்று. இன்றுள்ள அனைவருக்கும் அந்த படத்தின் வெற்றி தெரிந்திருக்கும். கோபம், ஏமாற்றம், காதல், வேகம் என அனைத்திலும் ஜொலித்திருப்பார் மாதவன். 90களை போலவே 2K கிட்ஸ்களும் மாதவனை கொண்டாடித்தீர்த்த படம் அது! அதன் பின் விக்ரம் வேதா, நிசப்தம், மாறா என கம் பேக் கொடுத்தார் மாதவன்.


30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!



ரஜினி வேண்டாம்… அமிதாப் போதும்!


ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கிறார். ‛50 வயதாகிவிட்டது… இன்னும் டூயட் பாட விருப்பமில்லை…’ என்பது தான் அது. அவ்வாறு வரும் வாய்ப்புகளையும் அவர் ஏற்பதில்லை. ‛டை அடிச்சுக்கலாம் சார்…’ என்கின்றனர். ‛தலைக்கு டை அடிக்கலாம்… உள்ளே….?’ என, அவரே கேள்வி எழுப்பி டூயட் ஹீரோக்களை தவிர்க்கிறார். கதையோடு உறவாட விரும்புகிறார். ரஜினியை விட அமிதாப்பை விரும்புகிறேன் என அவரே பேட்டியளித்திருக்கிறார். பேட்டி படி வாழ்ந்தும் கொண்டிருக்கிறார். ‛நான் உன்னை விரும்பல... நீ அழகா இருக்கேன்னு நெனைக்கல... ஆனா அதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா... இருக்கு...’ ஆமாம், இன்று 51வது வயது! இன்றும், அப்படி தான் மேடி அறியப்படுகிறார். என்றும் அவரை விரும்பட்டும் என வாழ்த்துகிறது ABP நாடு!


55 ஆண்டுகளுக்கு முன் ஊடக அறம் பேசிய எம்.ஜி.ஆர்.,! ஏன் உதயமானது சந்திரோதயம்?