யூடியூப், போன் என பல வடிவங்களில் வந்து நம்மை இம்சித்தது போதாது என்று, குறும்படங்கள் எடுத்து அதன் மூலம் வந்தும் சிலர் இம்சிக்கிறார்கள். போதாக்குறைக்கு முன்னாள் டிக்டாக் பிரபலம் என்கிற அனுபவத்தையும் அழைத்து வருகிறார்கள். அப்படி ஒரு படம் தான் நாளை ரீலீஸ் ஆகப்போகிறதாம்... சங்கர் நேத்து தானே பூஜை போட்டாரு... அண்ணாத்த பர்ஸ் லுக் இப்பதானே வந்திருக்கு... வலிமை ஒரு பாட்டு தானே விட்ருக்காங்க... பீட்ஸ் இன்னும் சூட்டிங் முடியலையே... என உங்கள் எண்ணத்தை அலைபாய விட வேண்டாம். இது அந்த அளவு பில்டப் தர வேண்டிய படம் இல்லை. ஆனாலும் பில்டப் பயங்கரமாக போய்க் கொண்டிருக்கிறது. 


டிக்டாக் பிரபலங்களில் டெல்டா மண்டலத்தை குத்தகைக்கு எடுத்த திருச்சி சாதனாவின் ‛அசுரி’ தான் நாளை ரீலீஸ் ஆகிறது. அசுரனுக்கு போட்டி தான் இந்த அசுரியாம். அநேகமாக அசுரன் தெலுங்கு ரீமேக் ‛நாரப்பா’வுக்கும் சேர்த்து பயங்கர டப் கொடுக்கும் என்று தான் தெரிகிறது. அப்படி சொன்னால் தான் தான் சோறு என்கிறார்கள். அசுரி ஒரு குறும்படம். வழக்கமாக குறும்பு படங்களை பதிவேற்றி வெறுப்பேற்றி வந்த திருச்சி சாதான, இப்போது குறும்படத்தோடு விநாயகர் சதூர்த்தியை விமர்சியாக்க வருகிறார். ஏற்கனவே அவர் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும், அசுரி தன் கலையுலக பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறார். அவர் நம்பிக்கையை நாம் ஏன் கெடுப்பானேன். தேனி மாவட்டத்தில் தேடி தேடி நடந்ததாம் அசுரி சூட்டிங். நாளை காலை 12:30 மணிக்கு ‛அசுரி’ ரிலீஸ் ஆகுதும். காரில் பயணத்துக்கொண்டே ‛உலகமே எதிர்பார்த்த’ அந்த அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் சாதனா. அத்தோடு அவர் விடவில்லை. ரசிகர்களுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார். இதோ அது...


‛‛நண்பர்களே நாளை ரொம்ப சந்தோஷமான நாள்... என்னோட குறும்படம் ரீலீஸ் ஆகுது. நிறை, குறைகள் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க. தப்பானா கமெண்ட் எதுவும் பண்ணாதீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கோம் நண்பர்களே. அசுரி படத்திற்கும் சப்போர்ட் பண்ணுங்க. தேனியில் தான் சூட் பண்ணோம். படம் முழுக்க ரம்யமா இருக்கும். நாளை காலை 12:30 மணிக்கு ரீலீஸ் பண்றேன். எல்லோரும் பார்த்து ஆதரவு தாங்க.’’ என பேசியுள்ளார். 


 



‛ஏன் தியேட்டரில் ரிலீஸ் செய்யவில்லை... தீபாவளிக்கு ரீலீஸ் பண்ணுங்க... உடனே டிக்கெட் புக் பண்ணு,,,’ என பல வகைகளில் சில ரசிகர்கள் தன் பங்கிற்கு கலாய்த்துக் கொண்டிருந்தாலும், தனது அசுரி அனைத்துக்கும் பதில் சொல்லும் என்கிற நம்பிக்கையில் நாளை ரீலீஸ் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருச்சி சாதனா. 


Flashback: நீக்கப்பட்ட அஜித்... சேர்க்கப்பட்ட பிரசாந்த்... ICU சபதத்தில் உருவான ஆனந்தபூங்காற்றே!