துணிவு படம் ஐந்து நாட்களில் 175 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.


எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சமூகக் கருத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த தல பொங்கலாக அமைந்து வசூலைக் குவித்து வருகிறது துணிவு.பொங்கல் விடுமுறை முடிய இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், துணிவு படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


துணிவா, வாரிசா?


மறுபுறம் பொங்கல் ரிலீசாக வெளியான வாரிசு படம், குடும்ப ஆடியன்ஸ்களைக் கவர்ந்து, தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் போட்டிபோட்டு வருகிறது.இதுவரை வாரிசு உலகளவில் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.


200 கோடி வசூலை நெருங்கவுள்ள துணிவு 






தற்போது துணிவு படம் உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 175 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் துணிவு விரைவில் 200 கோடி ரூபாயை வசூல் செய்து மாஸ் காட்டும் என எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது.


துணிவு - வாரிசு இரண்டில் யார் வெற்றியாளர் என தனித்து குறிப்பிட முடியாத நிலையில் வேறு வேறு ஜானரில் வெளியான இரண்டு படங்களும்  தொடர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகின்றன.


துணிவு படக்குழுவினர் 


துணிவு படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


மேலும் படிக்க : Ajith Vs Vijay: ‘ஐயய்யோ..மறுபடியுமா?’ மீண்டும் போட்டாபோட்டிக்கு தயாராகும் விஜய் - அஜித் படங்கள்?