நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடபெறும் என்று  சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார்.  ‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷூம் அனிருத்தும் இணைந்து இந்தப்படத்தில் பணியாற்றுகின்றனர்.  தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


 






ஹிட் பாடல் மேகம் கருக்காதே பெண்ணே!!


பெண்ணே பெண்ணே” எனத்தொடங்கும் இந்தப்பாடலை, நடிகர் தனுஷ் எழுதியிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப்பாடலுக்கு பீஸ்ட் படத்தில்  ‘ஹலோ மிதி அபி போ’  ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைப்பு செய்த  ஜானி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்துள்ளார். அது சம்பந்தமான மேக்கிங் காட்சிகளும் விடீயோவாக வெளியிடப்பட்டது.






தாய் கிழவி பாடல், லைஃப் ஆப் பழம் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 


தனுஷ் அனிருத் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இவர்களிடமிருந்து சிறப்பான ஹிட் பாடல்கள், இசை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்த படத்தில் நடிகை ராஷிகன்னா அனுஷா கதாபாத்திரத்திலும், நடிகை பிரியா பவானி சங்கர் ரஞ்சனி கதாபாத்திரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும், இயக்குநர் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் சன் பிக்சர்ஸ் அறிமுகம் செய்தது.  இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமத்து படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது.


வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண