Commonwealth Games 2022 Day 1 LIVE: கானா அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி
Commonwealth Games 2022 Day 1 LIVE updates: காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளின் விவரங்களை உடனுக்குடன் கீழே விரிவாக காணலாம்.
ABP NADU Last Updated: 29 Jul 2022 08:17 PM
Background
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை லைவாக பார்க்க இதோ இங்கே முழு விபரங்கள். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு பிரமாணடமாகத் தொடங்கியது....More
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை லைவாக பார்க்க இதோ இங்கே முழு விபரங்கள். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு பிரமாணடமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த பிரமாண்டமான காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணி தொடங்கவுள்ளது. அதேநேரத்தில், எல்லையோ, மைதானமோ இந்தியா பாகிஸ்தான் என்றாலே எப்போதும் ஒரு தனிக் கவனம் உலகம் முழுவதும் ஏற்பட்டுவிடுகிறது. அவ்வைகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கவனம் தான் இந்தியா பாகிஸ்தான் பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி, நாளை மறுநாள் அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை (31/07/2022) நடைபெறவுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர் பட்டாளத்தினால் தனிக் கவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 31ம் தேதி மாலை 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணி சார்பில் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் விபரம், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, சபினேனி மேகனா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா. இதுவரை 11 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ள இரு அணிகளில், இந்தியா ஒன்பது போட்டிகளிலும், பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கபடும் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டிகள் நேரடி ஒளிபரப்புகாமன்வெல்த் கேம்ஸ் 2022 இல் பெண்கள் T20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள Sony SIX, Sony TEN 1, Sony TEN 2, Sony TEN 3 மற்றும் Sony TEN 4 டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. SonyLIVல் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்பேஸ்புக் பக்கத்தில் தொடரட்விட்டர் பக்கத்தில் தொடரயூட்யூபில் வீடியோக்களை காண
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கானா அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி
கானா அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியை இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளது