ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில், நேற்று வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குதுகலமானார்கள்.
தற்போது, நடிகர் விஷால் நடித்த திமிரு படத்தில் ஏலே இசுக்கு என வசனம் பேசும் ஈஸ்வரியின் எடுப்பாக ( ஷ்ரிய ரெட்டி) வரும் நடிகர் விநாயகனும் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. நடிகர் விநாயகன் “ஒருத்தி” எனும் மலையாள படத்தின் ப்ரோமோஷனில் சர்ச்சையாக பேசி வசமாக சிக்கினார். பின், தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். இவர் ஜெயிலர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் , நேற்று துவங்கிய படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுபோக, ரஜினி மற்றும் விநாயகனை வைத்து காவல் நிலைய செட்-அப்பில் காட்சிகளை சில நாட்களுக்கு ஷூட் செய்யவுள்ளனர். திறமை வாய்ந்த இந்த நடிகர் கடைசியாக சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து ஜெயிலர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
விநாயகன், சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், சிறுத்தை, மரியான் படத்தில் நடித்துள்ளார். சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் ஜெயிலர் படத்தின் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் உறுதியானது. ஜெயிலர் படத்தின் சில காட்சிகளை ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலிலும் , முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்திலும் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்க, ஸ்டன்ட் சிவா சண்டை காட்சிகளை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : பாலிவுட்டுக்கு படையெடுக்கும் சவுத் குயின்ஸ்... மீண்டும் திரும்பும் 80ஸ் நிலை!
ரஜினி வீட்டில் விசேஷம்... நான்காவது முறை தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்