தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களை காட்டிலும் கேரளத்து பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வட இந்தியாவில் இருந்து வந்த நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டி கும்பிட்டு தமிழ் மருமகளாவும் ஏற்றுக்காெண்டவர்கள் தமிழர்கள். வந்தாரை வாழவைத்த தமிழ் சினிமா மீனாட்சி தினேஷை விட்டுவிடுவார்களா என்ன?. லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருக்கிறார். இவர் நடித்த முதல் படத்திலேயே வயது வித்தியாசம் பார்க்காமல் விக்ரம் பிரபுவை காதலிக்கும் கொழுந்தியாள் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Continues below advertisement

கேரளத்து பைங்கிளி

இவர் மலையாளத்தில் பொரிஞ்சு மரியம் ஜோஸ், மிஷன் சி பிளஸ், 18 பிளஸ், ரெட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ள மீனாட்சி தினேஷ் சேலஞ்சிங்கான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார். அதுவும் ஸ்டீரியோடைப்களை உடைக்கும் ஹீரோயினாகவும், அழுத்தம் நிறைந்த கதாப்பாத்திரம் எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்க தயராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மகிழ்ச்சியான தருணம்

லவ் மேரேஜ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், ரசிகர்கள் காட்டிய அன்பை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். என்னை நானே பரிசோதிக்க கிடைத்த வாய்ப்பாகத்தான் இப்படத்தை பார்த்தேன். ஆனால், நல்ல விதமாக அமைந்திருக்கிறது. பலரும் கதை சொல்ல வருகின்றனர். மீண்டும் சிறந்த கதாப்பாத்திரத்தில் என்னை காணலாம் என அவர் தெரிவித்தார். 

Continues below advertisement

சூர்யாவின் தீவிர ரசிகை

கேரளாவில் நடிகர் விஜய்யை போன்று சூர்யாவிற்கும் ரசிகர்கள் அதிகம். நானும் அப்படித்தான் சூர்யாவின் டைஹார்ட் ரசிகைங்க. அவருடன் ஒரு படத்திலாவது நடித்திட வேண்டும். அவருடன் நடிப்பது தான் என் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அதுவும் கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். சூர்யா சார் படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.