தமிழகம் முழுவதும் இன்றைய தினம் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 50க்குமேற்பட்ட திரையரங்குகளில் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் திரையரங்குக்கு முன்பாக குவிந்து பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கவும் நடனமாடி கொண்டாடினர்.
இதனிடையே விஜய் ரசிகர்கள் பலவிதமான நடனங்களை ஆடி கொண்டடித்திருத்தனர். மேலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கினர். இதனிடையே திரையரங்குக்குள் ரசிகர்கள் முந்திக்கொண்டு உள்ளே நுழைவு முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் திரையரங்குக்குள் உள்ளே செல்ல காலதாமதமானதால் ரசிகர்கள் சத்தத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் கூறுகையில், தி கோட் திரைப்படம் ரசிகர்களுக்கான படமாக அமைந்துள்ளது. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சுவாரசியம் குறையாமல் நகர்கிறது. குறிப்பாக பத்து நிமிடத்திற்கு ஒருமுறை GOOSEBUMPS காட்சிகள் வந்து ரசிகர்களை ஆரவாரம் செய்ததாக கூறினர். மேலும் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் எதிர்பாராத விதமாக திருப்புமுனை காட்சிகளாகவே அமைந்துள்ளது. படத்தில் எந்த ஒரு காட்சியும் சோர்வை தரவில்லை இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பான முறையில் படத்தை இயக்கியுள்ளதாக கூறினார். மேலும் புதிய தொழில்நுட்பத்தில் இளம் வயது விஜயை காண்பிக்கும் காட்சிகள் அருமையாக வந்துள்ளதாக கூறினர்.
இது மட்டுமில்லாமல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு காட்சி ஒன்றில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறினர்.