தினசரி வலைதளங்களில் வித விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானதாக இருப்பதை கண்டு நாமும் ரசித்து வருகிறோம். அதில் சில பார்ப்பவர்களை அதிசயிக்க செய்யும். அதிலும் விலங்குகளின் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் எப்போதுமே காண்போரை வசீகரிக்கும். அப்படியான விடியோ ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. ஆனால் இந்த வீடியோவில் மனிதமும் இணைந்துள்ளதால், பலரும் லைக்ஸ் அள்ளி தெளித்து வருகின்றனர்.
Watch Video: பீர் குடிக்க முயற்சித்த பாம்பு... அதன் பின் நடந்த விபரீதம்... ஷாக் வீடியோ!
சமீபத்தில் வைரலாகி உள்ள ட்விட்டர் விடியோவில் ஒரு பெண் சாலையில் கார்களை மறித்து நிறுத்துகிறார். நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி கீழே பார்த்து கூப்பிடுகிறார். அங்கிருந்து ஒரு வாத்து நடந்து வருகிறது. வாத்தின் பின்னால் அதன் குஞ்சுகள் பின் தொடர்ந்து வருகின்றன. முதலில் தயங்கி நின்ற வாத்து பின்னர் வேகமாக நடந்து சாலையை கடக்க தொடங்கியது. அந்த வாத்தின் பின்னால் பல குஞ்சு வாத்துகள் வரிசை மாறாமல் ஒரே நேர் கோட்டில் நடந்து செல்கின்றன. அப்படியே அழகாக சாலையை கடந்து அனைத்து வாத்து குஞ்சுகளையும் அழைத்துக் கொண்டு சாலையின் அடுத்த பகுதியை அடைந்தது.
Watch Video: 18-வது மாடியில் தலைகீழாக தொங்கிய பாட்டி.. லாவகமாக மீட்ட வீரர்கள்.. வைரல் வீடியோ
Watch Video| வெல்கம் டூ சண்டே சமையல்... நாய் சமைத்து சாப்பிடும் வைரல் வீடியோ !
இந்த விடியோ ஒரு காருக்குள் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக அந்த பெண் வந்த காராக அது இருக்கலாம். @HealDepressions என்னும் ட்விட்டர் பக்கத்தில் வெளியாடப்பட்டுள்ள இந்த விடியோ உண்மையிலேயே காண்போரது டிப்ரஷன்களை ஹீல் செய்கிறது என்றே கூற வேண்டும். குஞ்சு வாத்துகளை அழகாக அழைத்து செல்ல தாய் வாத்திற்கு வழி ஏற்படுத்தி தந்த இந்த விடியோ இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கும் மேலானவர்களால் காணப்பட்டுள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. இந்த வீடொயோவை கண்டவர்கள் கமென்டில் அந்த பெண்ணின் செயலை பாராட்டி வருவதுடன், க்யூட் ஆன விடியோ என்று புகழ்ந்து வருகின்றனர்.