சமூகவலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக நாய் தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு நாய் ஒன்று செய்யும் சேட்டையான சமையல் தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நாய் ஒன்று வேகமாக சமையல் செய்ய தயாராகி சில பொருட்களை எடுத்து வந்து வைக்கிறது. அதற்குபின்பு ஒரு சில பொருட்களை எடுத்து ஒரு பவுலில் போட்டு கலக்குகிறது. அதைத் தொடர்ந்து அதை சாப்பிட முயல்கிறது. அப்போது சிலவற்றை கீழே தவறுதலாக சிந்துகிறது. இதனால் உடனே ஓடி சென்று ஒரு சாப்பிடும் பாத்திரத்தை எடுத்து வந்து அந்த உணவை அதில் கொட்டி சாப்பிடுகிறது. அதேபோல் மேலும் ஒரு உணவை சமைத்து சாப்பிடுகிறது.
இந்த வீடியோவை தற்போது வரை 1.20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களின் கருத்துகளயும் பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு கியூட்டாக ஒரு நாய் சமையல் செய்கிறது என்பதை நம்ப முடியவில்லை. நாய்கள் எப்போதும் நம்முடைய செல்ல பிராணிகள் தான். மற்ற சிலர் நாங்கள் உண்மையில் பார்ப்பது நாய் தானா. அதுஎப்படி இவ்வளவு அழகாக இப்படி வேலைகளை செய்கிறது. இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: திருமண நிகழ்விலேயே கைதான மணமகன்.. ஜீப்புக்கு பின்னால் ஓடிய மணமகள்.. வைரல் வீடியோ!