மனிதர்கள் பயன்படுத்தும் பாெருட்கள், சில இல்லை இல்லை... பல நேரம் விலங்களுக்கும், பறவைகளும், ஊர்வனத்திற்கும் நெருக்கடிகளை தந்து விடுகிறது. இதுவரை நாம் அப்படி தான் பல நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்க இருப்பது... பாம்பு சிக்கிய கதை.


வழக்கமாய் பாம்பை கண்டால் படை நடுங்கும் என்பார்கள்... இங்கே பாம்பு ஒன்று நடுங்கிப் போய் உள்ளது. அதற்கு காரணம், பீர். பீரா... என ஆச்சரியப்பட வேண்டாம்... அது ஒன்றும் டாஸ்மாக் கடைக்குச் சென்று பீர் வாங்கி மட்டையாகிவிடவில்லை. இது யாரோ ஒரு பிரகஸ்பதி, வயிறு முட்ட பீர் குடித்துவிட்டு, பீர் டின்னை தூக்கி வீசியிருக்கிறார். 



வாசனை பிடித்ததா இல்லையா என்று தெரியவில்லை... அவ்வழியாக வந்த பாம்பு, பீரை டேஸ்ட் பண்ண ஆசைப்பட்டு, காலி டின் பீர் டப்பாவில் தலையை விட்டுள்ளது. அதன் பின் நடந்தது தான் கவலைக்குறியது. உள்ளே தலை சிக்கிக் கொள்ள, வெளியே வரமுடியவில்லை. தலை இல்லையென்றால் பாம்பு என்ன செய்யும். பாம்புக்கு பல் முக்கியமல்லவா... தலையில் சிக்கிய பீர் கேனுடன் ஊர்ந்து செல்ல முடியாமல், வழியும் தெரியாமல், பார்வையின்றி பரிதவிக்கும் பாம்பை, ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.


உண்மையில் எந்த பாம்புக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், அது ரொம்பவே சிரமப்பட்டதை அந்த வீடியோ மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தெற்கும் தெரியாமல், வடக்கும் தெரியாமல், ஊர்ந்து செல்ல முடியாமல், படமெடுக்க முடியாமல் தவித்துப் போனது பாம்பு. அந்த வீடியோவை எடுத்து, ‛தேவையில்லாததில் தலையை விட்டால் இப்படி தான் ஆகும்...’ என பிலாசபியும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஒருவகையில் அது உண்மை தான் என்றாலும், வாயுள்ள மனிதன் செய்த தவறுக்கு வாயில்லா அந்த ஜீவன் என்ன செய்யும். மதுபானங்களை குடித்துவிட்டு, பாட்டில்களை உடைப்பதால் பலருக்கு காயம் ஏற்படுகிறது என்று தான் இது போன்ற டின் பீர்களை அறிமுகம் செய்தார்கள். இதிலும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. உயிரினங்களுக்காக நாம் தான் கொஞ்சம் உஷாராக எதையும் அணுக வேண்டும் போலும். 


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண