விக்ரம், ஓர் கலைஞராக அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதில் மெனக்கெடுவதில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது என தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
, ரத்தம் ஓடும் ஆறு, ரத்தத்தில் குளிக்கும் விக்ரம் என மிரட்டலாக தங்கலான் டீசர் வெளியாகியுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடெக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் தங்கலான். இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியாவாக உருவாகி இருக்கும் தங்கலாம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வருகிறது.
தங்கலான் டீசர் வெளியீட்டு விழா
டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித், “அனைவரும் கஷ்டப்பட்டுதான் உழைக்கிறோம். ஆனால், ஒரு கலைஞனாக நாம் கொடுக்கும் ஈடுபாடு முக்கியம். விக்ரம் சார் படப்பிடிப்பில் அவரின் கடின உழைப்பையும் அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். வழக்கமாக ஒரு காதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என ஓவியங்கள், ஃபோட்டோஷூட் என முடிவு செய்துவிடுவோம். ஆனால், விக்ரம் சார் எனக்கு பல ஆப்சன்களை தந்தார். திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் மெனக்கெடல் ஆச்சரியத்தைத் தருகிறது. விலா எழும்பு உடைந்த பின்பும், அவர் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஷீட்டிங், சினிமா என்று வந்தால் நான் ரொம்ப சுயநலமானவன். என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க, நிஜத்தில் கொண்டுவர பல டேக் எடுக்க தயங்க மாட்டேன். அவர் உடல்நிலை சீராகி மீண்டும் ஷீட்டிங் தொடங்கிய பிறகு ஒரு நாள், மாலை 4 மணி வரை நீண்டு கொண்டிருந்தது. அப்போதும் அவர் ஈடுபாட்டுடன் இருந்தார். உண்மையில், விக்ரம் சாரின் ஒத்துழைப்பு அவர் அந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு நம்புகிறார் என்பதை காட்டுகிறது. அவரின் ஈடுபாடு எனக்கு நம்பிக்கை அளித்தது. தங்கலான் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” எனப் பேசியிருக்கிறார்.
மேலும்,”ஒரு கலைஞராக விக்ரம் கதாபாத்திரத்தை நிஜமாக்க முனைப்புடன் செயல்படும் விக்ரமிடன் ஆர்ட்வோர்க் இருப்பதை பார்க்கிறேன். இந்தப் படடத்தில் நிறைய பேர் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளனர். பார்வதி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். மாளவி தொடங்கி எல்லாரும் இதில் தங்களது சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளனர். எல்லாருடைய உழைப்பினை நீங்கள் படத்தில் காணலாம். எல்லா நடிகர்களும் எனக்கு சப்போர்ட் செய்துள்ளனர். விக்ரம் வோர்க் செய்யறதை பார்த்து நான் பயந்துவிட்டேன். இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் நடிகர்கள். அது திரையில் தெரியும்.. ஆனால், அவர்களுக்கு படம் வோர்க் ஆகுதா இல்லையான்னு மட்டும்தான் தெரியும். அதன்பிறகு உள்ள உழைப்பு தெரியாது. ஒரு திரைப்படம் வோர்க் ஆகிவிட்டால் அதிலுள்ள சின்ன சின்ன விசயங்கள் பற்றி கூட பேசுவார்கள்.இல்லையென்றால் இல்லை. ”என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும் வாசிக்க..