Stock Market Update: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 134 அல்லது 1.15 % புள்ளிகள் குறைந்து 63,770.97 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 33.85% அல்லது 1.14% சரிந்து 19,050.90 ஆக வர்த்தகமாகியது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக சரிவுடனேயே வர்த்தகமாகி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, 66 ஆயிரம் புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளாக குறைந்து வர்த்தகமாகிவருகிறது.
இருப்பினும் சில நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. லார்சன் மற்றும் டர்போ 45% Yoy வளர்ச்சியை அடைந்துள்ளது. ரூ.3,223 கோடி செப்டம்பர் மாத காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது.
டலால் ஸ்ட்ரீட் சரிவு, கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தைகளின் நிலமை ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ. லைஃப்,கனரா வங்கி, கோல் இந்தியா உள்ளிட்டவை லாபத்துடன் வர்த்தகமாகின.
பங்குச்சந்தையில் நிலவும் அசாதரண சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தனிமங்கள் துறை சரிந்தும் ரியல் எஸ்டேட் துறை ஏற்றத்துடம் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 116 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில், 1710 பங்குகள் அடுத்த நிலைக்கும், 106 பங்கள் மாற்றமின்றியும் 1279 பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், விப்ரோ, சன் பார்மா, பஜாஜ் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி.,இன்ஃபோசிஸ், அப்பல்லோ மருத்துவமனை, டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, மாருதி சுசூகி, கோடாக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, லார்சன், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஜெ.எஸ்.டபுள்யூ ஸ்டீல், ஹெச்,டி,எஃப்.சி. வங்கி, பிரிட்டானியா, சிப்ளா, அதானி எண்டபிரைசிஸ், பவர்கிரிட் கார்ப், டி.சி.எஸ்., ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
மேலும் வாசிக்க..
November 2023 Festival: நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள்! முழு அட்டவணை!